தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவில் சிரமதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சிரமதானமானது முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டது.

பிரதேசசெயலகம், பிரதேசசபை, பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் மேற்படி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

பாடசாலை சூழலில் மேற்கொள்ளும் சிரமதானத்தை அதிபர்களின் கண்காணிப்புடன் மாணவர்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் நெடுந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேசசெயலக பிரதேசசபையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Share this Article