தூய யுவானியார் ஆலய முன்றலில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான யோகா பயிற்சியானது இன்றைய தினம் (ஏப்ரல் 29) காலை தூய யுவானியார் ஆலயமுன்றலில் இடம்பெற்றது.

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த நலன்விரும்பியான யோகா போதனாசிரியர் கலந்துகொண்டு இப்பயிற்சிகளை மாணவர்காளுக்கு வழங்கினார்.

இந்தப் பயிற்சிகளானது நாளைய தினமும் (ஏப்ரல் 30) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது.

முதல்நாள் பயிற்சியில் கலந்துகொள்ளாத மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் நாளைய தினம் இடம்பெறவுள்ள பயிற்சியில் இணைந்துகொள்ள முடியும் எனவும் காலை 05:30 மணிக்கு இப்பயிற்சிகள் ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article