காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தீவக ரீதியிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி செப்ரெம்பர் 29, 30 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
பங்குபற்ற விரும்பும் அனைத்து கழகங்களும் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணி விபரத்தை (வீரரின் முழுப்பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம்) தீவகத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனும் கிராம சேவகரின் உறுதிப்படுத்தலோடு கழக கடிதத் தலைப்பில் அல்லது பொருத்தமான படிவத்தில் பூர்த்தி செய்து கழக செயலாளரின் 0766808458 இலக்கத்துக்கு தெளிவான பிரதிகளை 22.09.2023 திகதிக்கு முன்பாக அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளதுடன் மூலப்பிரதி போட்டி தினத்தன்று கையளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) உரிய பட்டியலிலுள்ள வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கமுடியும்.
2) உரிய வீரர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்ற அணிகளே போட்டி அட்டவணையில் இணைக்கப்படுவர்.
3) போட்டியில் பங்கேற்கும் அணிகள் A.Antonleo 81454678 Boc ,Kayts எனும் வங்கி கணக்கிலக்கத்துக்கு ரூபா 2500 செலுத்தி பற்றுச்சீட்டை செயலாளரின் 0766808458 இலக்கத்துக்கு 22.09.2022 முன்னர் பற்றுச்சீட்டினை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
4. அனுமதிக்கப்படும் அணிகளின் எண்ணிக்கை 24.