தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது தாக்குதல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில் அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கடந்த 9 ஆம் திகதி அப்பகுதிக்குச்சென்ற வவுனியா பிரதேசசெயலாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற வியாபாரநிலையங்களை அகற்றியிருந்தார்.

அந்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் நேற்றய தினம் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிராமசேவகரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article