2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே) தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 828.8 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 254.8 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) இதே காலப்பகுதியில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்க டொலர் மில்லியன் 233.6 செலவிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு (2026) முதல் ஐந்து மாதங்களில் தனியார் வாகன இறக்குமதி செலவு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சதவீதம் 254.8 அதிகரித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு மே மாதத்தில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்க டொலர் 207.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) மே மாதத்தில் தனியார் வாகன இறக்குமதி செலவு அமெரிக்க டொலர் மில்லியன் 91.9 ஆகும்.
அதன்படி, இந்த ஆண்டு மே மாத தனியார் வாகன இறக்குமதி செலவு, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 126.2 சதவீதம் அதிகரித்துள்ளது