தந்தை கொலை – மகன் கைது!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24/04) காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதாலேயே, மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸார் இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article