தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.

அத்தோடு, வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலையின் தாக்கம் சிறிய குளங்களையே பெரிதும் பாதித்துள்ளது.

Share this Article
Leave a comment