ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டுள்ளது.

குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ்பாடசாலையாக  அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (ஜூன்28) இடம்பெற்ற  நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் பாடசாலைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் என 902 பேர்விண்ணப்பத்திருந்த நிலையில் கிளிநொச்சி  விவேகானந்த வித்தியாலயம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பாடசாலை சுற்று சூழல் அமைச்சின் இரண்டு சுற்றுச் சூழல்விருதினை பெற்றுள்ளதோடு, சுற்றுச் சூழல் தகவல் நிலையத்தினையும்பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை மிக குறுகியகாலத்திற்குள் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்துவிடயங்களிலும் தேசிய மட்டத்தில் சாதனை புரியும் அளவில் வளர்ந்துள்ளமைஅனைவரினதும் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article