சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலக சுற்றுசு;சூழல் தினமான நேற்று (ஜீன் 05) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தால் 60து நிழல் மரங்கள் புங்குடுதீவு கண்ணகியம்மன் வீதியில் நடுகை செய்யப்பட்டது.


கனடாவில் வசிக்கும் புங்குடுதீவினைச் சேர்ந்த சந்திரகுமார் நடராஜா (ராஜன்) அவர்கள் தனது 60வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இதற்கான அனுசரணையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூழலில் மேம்பாட்டு அமைவம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரின் தேவை கருதி பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பாக தீவகங்களில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வமைப்பின் செயலாளரும் வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் அவர்கள் இப்பணியினை திறம்பட செயற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தே தன்னுடைய பிரதேசசபை கொடுப்பனவினைக் கூட இவ்வாறன செயற்பாடுகளில் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article