நெடுந்தீவு பிரதான வீதி கொங்கிறீற் வீதியாக மாற்றும் வேலைகள் இடம்பெற்று நிறைவடையும் நிலையில் பிரதான வீதியில் அமைந்துள்ள 05 மதகுகளில் பிடாரி அம்மன் கோவிலடி மற்றும் பற்றிமா ஆலயத்தடி பகுதியிலுள்ள 02 மீளமைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன.
இவை நீண்டகாலமாக இடிக்கப்பட்டு மழைநீர் ஓடும் வகையில் பள்ளமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இவை சீரான வகையில் உரிய இடைவெளியில் சீர் செய்யப்படாமல் வீதி புனரமைக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்ட பற்றிமா அன்னை ஆலயத்திற்கு அருகிலுள்ள மதகு வேலையின் போது சிறிதாக அமைக்கப்படுவதனால் மழைக்காலத்தில் வீதியை மேவியே மழைநீர் பாயும்நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அதனை மீள அளவீடு செய்து மதகினை அமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் தூரநோக்கை கவனத்தில் எடுத்து உரிய துறைசார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.