நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கத்தின் நன்கொடை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள மண்ணெண்ணையை நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஜூன் 15) இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் ஊடாக நெடுந்தீவு பிரதேச பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு இன்று பல நோக்கு சங்க எரிபொருள் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர், அமைச்சரின் பிரதிநிதியாக ஈ. பி. டி. பியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக பொறுப்பாளர், கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article