சிறையிலுள்ள நபரிடம் இருந்து முஜிபுர் எம்.பிக்கு வந்த அழைப்புகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக 53 தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளன. 

சிறையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் ஒருவருக்கும், முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கும் இடையிலேயே இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் பரிமாறப்பட்டுள்ளமை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சிறைக்கைதி ஒருவரிடமிருந்து கைபேசி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த தொலைபேசியை விரிவாக ஆய்வு செய்தபோது இந்த அழைப்புப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Article
Leave a comment