சிறப்புற நடந்த காரைநகர் பிரதேச மட்ட விளையாட்டு விழா – 2024

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன்04) பி.ப 02.30 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் செல்வி. ரஞ்சனா நவரத்தினம் தலைமையில்  இடம்பெற்றது.

இடம்பெற்ற இந் நிகழ்வில் மைதான நிகழ்வுகள் மற்றும்  உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி என்பன இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில்வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்கள்வழங்கும்  நிகழ்வும்  இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.பிரதீபன் (பதில் அரசாங்க அதிபர் , மாவட்டசெயலகம், யாழ்ப்பாணம்) சிறப்புவிருந்தினர்களாக திருமதி.ச.மஞ்சுளாதேவி  (பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை) திரு.க.சிவகரன்  (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வேலணை) திருமதி.உ.கவிதா (பிரதேச செயலாளர்,பிரதேச செயலகம், சங்கானை)  ஆகியோரும் கௌரவ விருந்தினராகளாக   திரு.அ.ஜெகதீஸ்வரன் (அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி) திரு. க. விஜிதரன் (மாவட்ட விளையாட்டுஉத்தியோகத்தர், மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்) திரு.கு.சர்வானந்தலிங்கம்(லண்டன்,களபூமி பிரித்தானிய ஒன்றியச் செயலாளர்) கலாநிதி . E.S.P நாகரத்தினம் (பிரபல தொழிலதிபர்) திரு.பா.சஜிந்தராம் (தேசிய விளையாட்டுவீரன்)

மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக வீர, வீரங்கனைகள், கிராம மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்திருந்தனர்.

Share this Article