மாகாணமட்ட நீச்சல் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 13 பதங்கங்களை வென்று சாதனை படைத்தனர். அம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (செப். 10) காலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் விருநரதினர்கள் சகிதம் மாலை அணிவிக்கப்பட்டு வித்தியலய பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கனடாவில் வசிக்கும் வித்தியாலய பழைய மாணவர் சு.கோவிந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், பதக்கங்களையும், சான்றிதழையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
அத்துடன் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச விளையாட்டு அலுவலர் சி. வல்லவக்குமரன், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தலைவர் எ. அருந்தவசீலன், அன்னை கடல் உணவு நிறுவன நெடுந்தீவு முகாமையாளர் ச.றஜீன், நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் ஒன்றியம் சார்பில் அ.புஸ்பகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாகாணமட்ட போட்டியின் போது 08 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளிபதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும் பெற்று நெடுந்தீவுமகாவித்தியாலயம் சாதனை படைத்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.