நெடுந்தீவில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மற்றும்சுற்றாடல் வேலைத்திட்டம் – 2024 இன் கீழ் நேற்றையதினம் (செப். 10) சர்வதேசஎழுத்தறிவு தின நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி தலைமையக  முகாமையாளர்  செல்வி.என். நகுலாராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர்  திருமதி.நிவேதிகா கேதீசன் கலந்துகொண்டுசிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி மகாசங்க முகாமையாளர், சமுர்த்தி கருத்திட்டமுகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்கள்என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article