சிசுபல சமூக நலன்புரித் திட்டத்தின்கீழ் நெடுந்தீவு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

” சமுர்த்தி சமுதாய அடிப்படை மாணவர் சக்தி (சிசுபல) சமூக நலன்புரி ” திட்டத்தின்கீழ் நெடுந்தீவுப் பாடசாலைச் சிறார்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (செப்ரெம்பர் 25) நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆர். ராஜ்பவன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this Article