நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நடமாடும் சேவைமூலம் சாரதி அனுமதிபத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையில் சித்தி எய்தியவர்களுக்கானசெயன்முறை பரீட்சை எதிர்வரும் ஜூலை 29 – செவ்வாய்க்கிழமை நெடுந்தீவில்இடம்பெறவுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பவற்றுக்கான செயன்முறை பரீட்சைகள்மட்டுமே இதன்போது இடம்பெறவுள்ளது.
பரீட்சார்திகளுக்கான பயிற்சிகளை நெடுந்தீவிலேயே வழங்க தனியார் சாரதிபயிற்சிப் பாடசாலையான றொசான் பயிலகம் தனது அலுவலகத்தினை நெடுந்தீவு பிரதான வீதியில் உள்ள பர்னாந்து அக்கினேஸ் கட்டடத்தில் அமைந்துள்ள செவ்வெந்தி கொம் நெற் நிலையத்தில் திறந்து தற்போது பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தொடர்புக்கு : 0777468814
றொசான் பயிலகம்
இதேவேளை செயன்முறைப் பரீட்சையில் பங்குபெறுவோருக்கான பயிற்சிகள் எதிர்வரும் ஜூலை 25 தொடக்கம் ஜூலை 28 வரையான காலப்பகுதியில் நெடுந்தீவு மத்தி பெருக்கடி விநாயகர் ஆலயம் அருகாமையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பரீட்சார்திகள் தங்களது சொந்த வாகனங்களில் அல்லது விரும்பிய தனியார்சாரதி பயிற்சி சாலைகளூடாக விண்ணப்பம்செய்தோ பரீட்சையில்தோற்றமுடியும்
இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு எதுவித கட்டணங்களும்செலுத்த வேண்டிய தேவைப்பாடுகள் இல்லையென்பதுடன் தனியார் சாரதிபயிற்சி பாடசாலைகள் வழமையாக அறவிடுகின்ற நிதியை செலுத்திபயிற்சிகளை பெறவேண்டியது பரீட்சார்திகளின் பொறுப்பாகும்.