சரஸ்வதி ஜீவராஜ்க்கு “சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் ” விருது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அகில இலங்கை தமிழ் அழகுக்கலை,அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்தும் 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான “சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் ”
விருதுகள் விழா இன்று(மே 6) இடம்பெறவுள்ளது.

காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திருகோணமலை, உட்துறைமுக வீதியில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

விருதுவிழாவில் நெடுந்தீவை சேர்ந்தவரும் தற்போது கிளிநொச்சியில் வசிப்பவருமான சரஸ்வதி ஜீவராஜ் 2022 ஆம் ஆண்டுக்கான விருதினைப்பெறவுள்ளார்.

ஆரிகலை தொடர்பான வன்னி பயிற்சி கல்லூரி நடாத்தி வருகின்றதுடன் ஆரிக்கலை தொடர்பான பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.

அண்மையில் நெடுந்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 நாள் ஆரி பயிற்சி வகுப்பினை இவர் சிறப்பாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article