சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறைப் பிரதேசத்தில் இன்றைய தினம் (ஜீலை 07) சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இம் மாதம் முதலாம் திகதி முதல் இன்றைய நாள் வரை சௌபாக்கிய வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.


இன்றைய தினம் சிப்தோரா மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்வு சௌபாக்கியா வீடு திறப்பு விழா போன்றன மிக சிறப்பாக நடாத்தப்பட்டன.


சமுர்த்தி முகாமையாளர் அவர்களது தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச செலயலாளர் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்கள் சிறிலங்கா பெரமுன கட்சியின் தீவக இணைப்பாரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளருமாகிய திரு.மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் அவர்களுடன் ஊர்காவற்துறை பிரதேச சபையின் உபதவிசாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர் என பலர் கலந்து கொண்டனர்

Share this Article