சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மசாலாப்பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் தூள், 273 கிலோ உலர்ந்த இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள்மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுடன் இரண்டு வாடகைவண்டிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப்பொருட்கள், மருந்துகள் மற்றும் இரண்டு வாடகை வண்டிகளுடன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்தில்ஒப்படைக்கப்பட்டனர்.

Share this Article