நெடுந்தீவு கிழக்கு இளைஞர்களின் நல்லெண்ண செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு இளைஞர்கள் தாமாக முன்வந்து நேற்று(ஓகஸ்ட் 29) கிழக்கு முருகன் கோவில் பகுதியில் உள்ள கேணியை இறைத்து சுத்தம் செய்ததுள்ளனர். இந்த நல்லெண்ண செயற்பாட்டை முன்னெடுத்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதேவேளை இக் கேணியில் வைத்து மாடுகள் கட்டுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் மீறுவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான பொது அறிவித்தல் பலகை அப்பகுதியில் வைக்கபடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share this Article