கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, மீண்டும் ஒரு அழைப்பாணையை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022, மே 9 அன்று “அரகாலயா” போராட்டத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த தீவு தழுவிய அமைதியின்மையின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியை மீட்பதை இந்த மனு கோருகிறது.

இன்று (08/05) நடைபெற்ற விசாரணையின் போது, கோட்டபாய ராஜபக்ஷவுக்கு புதிய அழைப்பாணையை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழங்கப்பட்ட இழப்பீடு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this Article