கொழும்பில் அமைக்கப்பட்டுவந்த பிரமாண்டமான சொகுசு நட்சத்திர ஹோட்டல்திறந்துவைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளITC ரத்னதீப  அதி சொகுசு நட்சத்திர விருந்தகம் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த விருந்தகம் முதல் கட்டிடம் 30 அடுக்கு விருந்தகமாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்புஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும்இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

Share this Article