கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி நெடுந்தீவில் இன்று பெரும் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று (ஏப்ரல் 24) திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு
மாவிலி துறைமுகத்திலிருந்து, நெடுந்தீவு பிரதேசசெயலகம், நெடுந்தீவு காவல் நிலையம் வரை இடம்பெற்றது.

ஊர்வலத்தின் முடிவில் பிரதேசசெயலாளர், நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு மாவிலிதுறைக்கு முன்பாக உள்ள வீட்டில் தங்கியிருந்த ஐவரை வெட்டிக் கொலை செய்து ஒருவரை காயமடைய செய்த சம்பவம் தொடர்பான குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுத்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு எங்கே சென்று கொண்டு இருக்கிறது போன்ற பல கேள்விகளை தாங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

இந்த ஊர்வலத்தில் நெடுந்தீவிலுள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article