கொடிவேல் அறிவாலயத்தின் பயணிகள் படகுச்சேவை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கொடிவேல் அறிவாலயத்தால் திட்டமிட்டவாறு இன்று (செப்ரம்பர் 25) காலை படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 06.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மீண்டும் மாலை 5.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளது.

4.20 மணிக்கு யாழில் இருந்து புறப்படும் பேருந்து சேவை குறிகாட்டுவான் துறைமுகத்தினை வந்தடைந்த பின்பே இப்படகு குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

இந்தப் படகு சேவையின் நெடுந்தீவில் இருந்து படகு புறப்படும் நேரம் காலை 6.10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

காலையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து யாழ்நகர் செல்லும் பேருந்து சேவை 07.00 மணிக்கு ஆரம்பிப்பதால் அப்பேருந்து சேவையினைக் கருத்திற் கொண்டு படகு சேவை காலை 06.10 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் என அறிவாலயத்தினர் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் காலை 06.00 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்திற்கு வருகைதருவதுடன் முற்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தொரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்தமாக ஒரு மாதகாலத்திற்கு தொடர்ச்சியாக இந்தச் சேவை நடைபெறும் மக்கள் ஆதரவும் தேவையும் காணப்படின் இச்சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:- 0770251033 0761551033

Share this Article