By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கைது செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் பிணையில் செல்ல அனுமதி!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கைது செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் பிணையில் செல்ல அனுமதி!
நெடுந்தீவு

கைது செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் பிணையில் செல்ல அனுமதி!

Last updated: 2023/04/25 at 12:00 PM
Published April 25, 2023 461 Views
Share
1 Min Read
SHARE

காணி மோசடி வழக்கில் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 23) கைதுசெய்யப்பட்ட நெடுந்தீவுப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் அவரது மோசடிக்கு துணை நின்ற இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்திய போது வழங்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் பிணையில் செல்ல அனுமதிவழங்கியுள்ளார்.

முறைப்பாட்டாளர் புலம்பெயர் தேசத்தில் இருப்பதால் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரைக் காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய நெடுந்தீவுப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அவரது மோசடிக்கு துணை நின்ற முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்படவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவுப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

நெடுந்தீவு 3 ஆம் வட்டாரத்திலுள்ள ஆதனம் 12 சகோதரர்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட வேண்டும்.எனினும் அந்த ஆதனத்தை சகோதரர் ஒருவர் சட்டத்துக்குப் புறம்பாக தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர் ஒருவர் பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியாக ஆதனத்தை உரிமம் மாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரன் என்பவரை கைது செய்தனர்.

அவரது மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக் கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கையை யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணறோயன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali April 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண அறிவித்தல் (சுப்ரமணியம் மகாதேவா)
Next Article வட இலங்கை சங்கீத சபையில் யாழிசைக் கவித்தாடக ஆண்டு விழாவும், நூல்கள் வெளியீடும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?