குறுஞ்செய்தியினூடாக நிதி மோசடி – தபால் திணைக்களம் எச்சரிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளது. தபால் திணைக்களத்தினால் உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு பொதிகள் சம்பந்தமாக எவ்வித குறுஞ்செய்திகளும்அனுப்பபடமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்கள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் போன்று போலியானஇணைய தளமொன்று உருவாக்கப்பட்டு, நபர்களின் தனிப்பட்ட தகவல்கள்திருடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0112542104, 0112 334728, 0112335978, 0112687229, 0112330072

Share this Article