குறிகாட்டுவான் துறைமுகம் புனரமைப்பு விரைவில் – துறைசார் அதிகாரிகள் களவிஜயம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குறிகாட்டுவான் துறைமுகம் புனரமைப்பு தொடர்பாக வடமாகாண வீதி அபிவிருத்திச்சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள்   யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர்  இன்று (மே01) மாலை குறிகாட்டுவான் துறைமுகத்திற்க்கு சென்றுபார்வையிட்டனர்.

இதேவேளை குறிகாட்டுவான்துறைமுகத்திற்கு செல்லும் வீதி, நடைபாதை மற்றும் வாகனங்கள் தரித்து செல்லும் விதமாகவும் அகலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் ரணசிங்க மற்றும் அவர் தலைமையிலான அதிகாரிகள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், பொறியியலாளர்கள், கடற்படை அதிகாரிகள்ஆகியோர் கலந்து கொண்டனர். இத்துடன், அமைச்சர் விமல் ரத்நாயக்காவின்விசேட இணைப்பாளர் சிறீவாகிசனும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

துறைமுகத்தின் நிலவரத்தை நேரில் பார்வையிட்டு, தொழில்நுட்ப தேவைகள்மற்றும் அபிவிருத்திச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேவேளை குறிகாட்டுவானுக்கும் நயினாதீவிற்க்குமான புதிய பாதைசேவை எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article