மடத்துவெளி கடலில் சடலம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு மடத்துவெளி கடற்கரையில்  நேற்று (ஜூன் 15) வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய சடலம்  சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article