குமுதினிப் படுகொலை நினைவேந்தலுக்கான முன்னாய்த்தக் கூட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குமுதினிப் படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான முன்னாய்த்தக் கலந்துரையாடல் இன்று (மே 12) மாலை நெடுந்தீவில் நடைபெற்றது.

நினைவேந்தல் குழுத் தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு பங்குத் தந்தை வசந்தன் அடிகள், முன்னாள் கிராம அலுவலர் ப.கதிரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் நினைவுநாள் நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. நினைவு நாள் சிறப்பு வழிபாடுகள் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share this Article