குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றதால் 10 லட்சம் அபராதம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

குற்றச்சாட்டை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ள 96 ஆம் இலக்க உத்தரவின்படி, 500 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் வரையான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த உணவகம் 500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தலை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வழக்குத் தொடர்ந்திருந்தது.

அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தலை உணவகங்கள் அல்லது விடுதிகள் உட்பட எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் அந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment