குடிநீர் இணைப்பு பெற கட்டுப்பண வசதியற்றவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளை உதவி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு விண்ணப்பித்து, நீண்டகாலமாக கட்டுப்பணம் செலுத்தி இணைப்பை பெற முடியாமல் இருந்து வந்த பதினைந்து வசதியற்ற,வறியநிலை குடும்பங்களுக்கு கட்டுப்பண உதவியினை வழங்கியுள்ளது.

 

 

பூமணி அம்மா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விண்ணப்பதாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தகரான பிரான்சிஸ் சிந்தகுல ஜெயம் அவர்களால் குடும்பம் ஒன்றிற்கு தலா பதினைந்தாயிரம் ரூபா படி பதினைந்து குடும்பங்களுக்கும் 2 லட்சத்து 25,000 ரூபா இன்று(செப்ரெம்பர் 20) வழங்கி வைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில் வாகனம்,அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினரான யா.தேவதாஸ்,சமூக செயற்பாட்டாளரான திருமதி தனீஸ்குமார் நிவேதா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this Article