கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிளித்தட்டு போட்டித்தொடர் – 2024!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பதிவு செய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கு இடையில் எதிர்வரும் ஆடிப்பிறப்பு தமிழரின் பாரம்பரியதிருநாளாகிய அன்று இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய வகையில் ஆண்பெண் இருபாலருக்கும் இடையிலான கிளித்தட்டு போட்டிகள் நடைபெற மாவட்டதமிழரசுக் கட்சியின் பாரம்பரிய விளையாட்டுகள் செயலணி ஏற்பாடுசெய்துள்ளது.

தந்தை செல்வா வெற்றிக் கேடயம் மற்றும் பண பரிசில்களை பெற்றுக் கொள்ளும்வகையில் இப் போட்டிகள் நடைபெற உள்ளதுடன் தமிழ் மக்களின் பாரம்பரியபண்பாட்டு விழாவாகிய ஆடிப்பிறப்பு அன்று எழுச்சிமிகு இறுதிப் போட்டிகளைகிளிநொச்சி நகரில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக இன்று (ஜூன்16) தொடக்கம்எதிர்வரும் (ஜூன்30) வரை உள்ள காலப்பகுதியில் விளையாட்டுத் துறைஇணைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை மற்றும்அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புக்கு:

ச.அலன்டீலன்:- 0776145084

அ.சிவகுமாரன்:- 0777224953

Share this Article