கிளிநொச்சி மருத்துவமனையின் பெண் நோயியல் சேவை பிரிவு ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் நெதர்லாந்து அரசின்நிதி உதவியில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்புசிறப்பு மையத்தின் பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி வடமாகாண ஆளுநரால்  இன்று (செப்.24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர் பிரபாத், மருத்துவர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஆகியோர்கலந்துகொண்டனர்.

இதேவேளை, மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்புமையத்திலுள்ள செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article