கிளிநொச்சி சம்பியன் லீக் துடுப்பாட்ட போட்டி – தர்மபுரம் சுப்பர் ரைகர்ஸ் வெற்றி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி சம்பியன் லீக் துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (04/02) நடைபெற்றது.

கிளிநொச்சி சம்பியன் லீக் துடுப்பாட்ட போட்டியானது கடந்த வருடம் 10ம் மாதம் 4ம் திகதி 10அணிகள் கொண்ட போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தர்மபுரம் சுப்பர் ரைகர்ஸ் மற்றும் கிளிநொச்சி நைட் ரேடர்ஸ் அணிகள் மோதியிருந்தன

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளி நைட் ரேடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மபுரம் சுப்பர் ரைகர்ஸ் 20பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 159ஓட்டங்களுக்கு 08 இலக்குகளை இழந்திருந்தது.

160 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய கிளி நைட் ரேடர்ஸ் அணி 20பந்து பரிமாற்றம் நிறைவில் 09 இலக்குகளை இழந்து  128 ஓட்டங்களை  மாத்திரம் பெற்றது. 31ஓட்டங்களினால் தர்மபுரம் சுப்பர் ரைகர்ஸ் வெற்றி பெற்றது .

Share this Article