கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவா் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி   ஒருவர்  உயிரிழந்தார்.

நாய் கூடு ஒன்றை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியே அவர்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய நபரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பயனளிக்காது அவர் உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனைக்காக உடல் கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article