கரப்பந்தாட்டத்தில் ஸ்ரார் இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஆண், பெண் கரப்பந்தாட்டப் போட்டி நேற்று சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) காலை 9.00 நெடுந்தீவு ஐக்கியதீப விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் ஸ்ரார் இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் சென் அன்ரனிஸ் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு சம்பியனாக தெரிவானது.

பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் விங்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் சென் ஜோண்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு சம்பியனாக தெரிவானது.

Share this Article