உத்தியோக பூர்வ விஜயமாக அண்மையில் கனடா சென்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடாஅமைப்பினர் கௌரவிப்பினை வழங்கியிருந்தனர்.
நெடுந்தீவின் மைந்தனும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் திருகோணமலையின் மைந்தனும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் அவர்களையும்,
கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் வைத்து நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்–கனடா அமைப்பினர் கௌரவிப்பினை வழங்கி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.