கட்சித் தாவல் தடைச் சட்டம் வருகின்றது – அரசாங்கம் அதிரடி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான “கட்சித் தாவல் தடைச் சட்டத்தை” கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

​இச்சட்டத்தின்படி, தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற எம்பி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது வேறு கட்சிக்கு மாறினாலோ அவரது நாடாளுமன்றப் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்.

அரசியல் சுயலாபங்களுக்காகவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் எம்பிக்கள் கட்சி மாறுவதைத் தடுத்து, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

​ தற்போதைய சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி எம்பிக்கள் நீதிமன்றம் மூலம் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்க இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.

.

Share this Article
Leave a comment