அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஜுலை முதலாம் திகதி மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றும் நந்திக சனத் குமாநாயக்கவின் பதவியே மாற்றப்படவுள்ளது.

அவர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.அவர் பதவி விலகி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

அவரின் பதவிக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்படுவார்.இவர் தற்போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றுகிறார். பெப்ரவரி 16 ஆம் திகதியே அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

டித்வா பேரனர்த்தத்தின் போது இவரின் பெயரே அதிகம் பேசப்பட்டது. அண்மையில் பிரபாத் சந்திரகீர்த்த சென்றிருந்த விருந்துபசார நிகழ்விலும் இது தொடர்பில் அவர் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் அறியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கை தூதுவர் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க தூதுவர் பதவி மிக முக்கியமானது என்பதாலே நந்திக சனத் குமாநாயக்க தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

Share this Article
Leave a comment