எழுவதீவு மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொவிட் 19 இடர் நிலமையில் மாணவர்களது கல்வி பாதிப்படையக்கூடாது என்பதனைக் கருத்திற் கொண்டு யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் எழுவதீவு பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் (ஜீன் 18) வழங்கி வைக்கப்பட்டது.


எழுவதீவு முருகவேள் வித்தியாலயம், எழுவதீவு றோ.க.த.க வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் 40 மாணவர்களுக்கு ஒருவருக்கு தலா 3500.00 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எழுவதீவு பிரதேச மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகளின் பங்களிப்புகளுடன் சிறப்பான முறையில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Share this Article