எனது மகனை உயிரோடு மீட்டுத் தாருங்கள் – கதறிஅழுத அனோஜனின் தாயார் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு   அனோஜனின் தாயார் கதறிஅழுது மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (18/09) வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார்.

அவர் மேலும் கூறுகையில் :

அவர் செய்தது தவறுதான் அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமாசபை,இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவு கூர்ந்து  மீண்டும் ஒருமுறை மன்னித்து எனது மகனை உயிரோடு மீட்டு தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம் என்று கதறியழுது கூறினார் .

அனோஜனின் சகோதரர் கூறுகையில்

எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில் தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம் அவருக்கு இந்த கெதி என்றால் நாங்கள் நிர்க்கதியாவோம்.

செய்த தவறுக்கு மிகவும் பெரிய தண்டனையாக இதை நினைக்கிறோம்.  தயவு கூர்ந்து அவர் செய்த தவறை மன்னித்து  அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்து தாருங்கள் என்றார்.

Share this Article
Leave a comment