ஊர்காவற்றுறை விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்றுறை பாலக்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (மார்ச் 22), இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடுமையாக காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 82 வயது முதியவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article