ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ளமுயன்றவர் தாக்கப்பட்டு படுகாயம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டுபடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள்ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது பலர் சமரசம் செய்ய முயன்றபோதும், அதனை ஏற்க மறுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்டஅவர், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டபோது அங்கிருந்தவர்களால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அந்தப் பகுதியில் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

Share this Article