உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொவிட் 19 தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டில் வாழ்ந்து வரும் 32 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் நேற்றைய தினம் (செப்ரம்பர் 15) வழங்கி வைக்கப்பட்டது.

மக்கள் நலன் காப்பகம் எனும் அமைப்பின் ஊடாக அவ்வமைப்பின் யாழ் மாவட்ட செயலாளர் திரு.தவஞானராஜன் அவர்களினால் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


புங்குடுதீவு 12ம் வட்டாரத்தினை சேர்ந்த ஜே-26 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 32 குடும்பங்களுக்கு தலா 1500.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

Share this Article