இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் (வயது 53) இன்று காலமானார்.

இன்று (மே 26) பிற்பகல் ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வஇல்லத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராகபணியாற்றியுள்ளார்.

Share this Article