இரகுபதி நினைவு நூலகத்திற்கு யாழ் நூலகத்தால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் கொடுக்கும் பகுதியான இரகுபதி நினைவு நூலகத்திற்கு யாழ் பொதுநூலகத்தினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

யாழ் பொது நூலகத்திற்கென பலராலும் அன்பளிப்பு செய்யப்படுகின்ற நூல்களில் இரட்டிப்பாக காணப்படுகின்ற நூல்களை யாழ் மாவட்டத்திலுள்ள சனசமூகநிலைய நூலகம் மற்றும் பாடசாலை நூலகம் என்பவற்றுக்கு வழங்கும் செயற்பாட்டின் அடிப்படையில் குறித்த நூலக பாவனைக்காக சுமார் 300 புத்தகங்கள் அன்பளிப்பாக அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

Share this Article