அழுகிய நிலையில் முதியவரின் சடலம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா – ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து, முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (05 மார்ச்) மீட்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட அந்த நீர்நிலைக்குள் சடலமொன்று இருப்பதை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்கள். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்தனர். சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளும், உடற்கூற்றுப் பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article