அனலைதீவில் நேற்று கால்நடை வைத்திய நடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவில் ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் கால்நடை வைத்திய சேவை முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (மார்ச் 14), ஊர்காவற்றுறை பிரதேச அரசாங்க கால்நடை வைத்தியர் மாகாலிங்கம் முரளிதாஸ் தலைமையில் இந்த சேவைகள் இடம்பெற்றன.

இந்த நடமாடும் வைத்திய சேவையின் மூலம், கால்நடை பண்ணைகள் பதிவு செய்தல், கால்நடை மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு நோய் சிகிச்சைகள் வழங்கல், நாய்களுக்கு இலவச விசர்நோய் தடுப்பூசி செலுத்தல், கால்நடைகளுக்கு இலவச நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு நோய் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் வழங்கல் ஆகியவை இடம்பெற்றன.

மேலும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பண்ணை விலங்கு தீவனம் மற்றும் தேவையான உள்ளீடுகள் வழங்கப்பட்டன. அதன்மூலம், பண்ணை விலங்குகள் பராமரிப்பு, நீடித்த பண்ணை முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article