அனலைதீவில் தேர்தல் பரப்புரைக்காக டக்ளஸ் குழுவினர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்களின் பங்கு தொடர்பில்   தெளிவுபடுத்தும் நோக்கிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅனலைதீவிற்கான விஜயத்தினை இன்று (ஏப்ரல் 08) மேற்கொண்டிருந்தார்.

அனலைதீவு பெரியபுலம் பிள்ளையார் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேடபூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டு மதத் தலைவர்களின் ஆசியினையும் பெற்றுள்ளார்.

கடந்த கால அனுபவங்களின் துணையுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் வினைத் திறனாக இருக்கும் என்று தெரிவித்துள்ள  டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மக்கள் தமது கட்சிக்கு வாக்களித்து தமது கரங்களை மேலும்வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதன்போதுஅனலைதீவிற்கிற்கான கட்சியின் வேட்பாளர்களும்  நிகழ்வில் கலந்திருந்தனர்.

இதேவேளை அனலைதீவுப் பகுதியில் கட்சி காரியாலயத்தை சம்பிரதாயபூர்வமாகதிறந்து வைத்த பின்னர் கட்சி செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர்மத்தியில் உரையாற்றியிருந்தார்.

Share this Article